மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுக விவகாரத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாக சுனில் கருத்து!

- Advertisement -

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில், அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி குற்றஞ்சாட்டுகின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

- Advertisement -

மக்களின் எதிர்ப்புக்களினாலும், ஆர்ப்பாட்டங்களினாலும் ஏற்பட்ட அழுத்தத்திற்கு அடிபணிந்தே துறைமுக விவகாரத்தை அரசாங்கம் நிறைவுக்குக் கொண்டுவந்தது. இதனை தமக்கு செய்ய முடியாது என அறிந்த பின்னரே இதனை செய்தார்கள். அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் வெறும் கோஷங்களை எழுப்புவதில் பயனில்லை. துறைமுக தொழிசங்கங்களின் போராட்டங்கள் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை நாம் கைவிட்டோம் என அவர்கள் கூறினால், அதனை சற்றேனும் கௌரவமாக பார்க்கலாம். ஆனால் அவ்வாறு கூறாது, கிழக்கு முனையத்தை நூற்றுக்கு நூறு வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தீர்மானித்ததாக கூறுகின்றார்கள். அது ஏற்கனவே துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, விமல் வீரவன்ச, கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ள மற்றும் ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கீழ் உள்ள அமைச்சரவையினால், விற்பனை செய்யப்படவிருந்த முனையத்தையே தடுத்து நிறுத்தியுள்ளோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz