மெய்ப்பொருள் காண்பது அறிவு

Sputnik V கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

- Advertisement -

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள Sputnik V கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியினை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான முகவராக அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும்  நடவடிக்கைக்கு அமைவாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் தொடர்பான ஆவணங்கள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள Sputnik தடுப்பூசி, சீனாவில் தாயாரிக்கப்பட்டுள்ள Sinopharm கொரோனா தடுப்பூசி மற்றும் Bharat Biotech நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கும் அனுமதி கோரி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள Oxford-AstraZeneca COVIShield தடுப்பூசிக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz