நாட்டின் மூலை முடுக்கெங்கும் வாழும் மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றினை அனுபவித்திட வேண்டுமென நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ்வதற்கு பலமான பொருளாதாரம் மிகவும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தி தன்னிறைவு கொண்ட நாடாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் எந்தவித தடையும் இன்றி சுதந்திரக் காற்றை அனுபவிக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சுதந்திரக் காற்றினை அனுபவித்திட அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தேசியக் கொடியினை ஏற்றிவைத்ததுடன் தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.