மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிரிகளைத் தோற்கடிக்க ஒன்றிணைந்தது போலவே கொரோனா தொற்றை தோற்கடிக்கவும் ஒன்றிணையுமாறு பிரதமர் அழைப்பு

- Advertisement -

எதிரிகளைத் தோற்கடிக்க ஒன்றிணைந்தது போலவே கொரோனா தொற்றை தோற்கடிக்கவும் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், உலகளாவிய ரீதியில் சவாலை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று நெருக்கடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாய்நாட்டுக்கு எதிரான, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் செயற்பாடுகளில் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயன்முறையே தற்போது தேவையாக உள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் சுதந்திர தினத்தை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவதற்கு வேறுபாடுகளை மறந்து  அனைத்து இலங்கையர்களும்  நிலையான பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள சுதந்திரதினச் செய்தியிலே  இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுதந்திரத்திற்குப் பின்னர் எதிரிகளின் அச்சுறுத்தல், நோய் அச்சம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் ஒருபோதும் பின்னிற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில்,  தமது சுதந்திரம் மற்றும் சொந்த வாழ்க்கையினை பொருட்படுத்தாது நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் தாமது மரியாதையினை தெரிவித்துக்கொள்வதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களும் விரைவில் குணமடைய தாம் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஐக்கியம், ஒறுமைப்பாடு மற்றும் இலங்கை வளமான தேசமாக முன்னேற வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் இந்த  சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  நாட்டில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சர்வதேச ரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு நான் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டுமெனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தமது சுதந்திரதினச் செய்தியில்  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz