உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி ஆகிய சம்பவங்கள் தொடர்பில் உடன்நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் அனைவருக்கும் சமஉரிமை காணப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சுதந்திர தின விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் 73 ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
இதன்போது ஜனாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சகோதர மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதேவேளை ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் எதிர்க்கட்சி தலைவர் முப்படை தளபதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு இதன்போது விசேட வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.