மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டுள்ள அகிம்சை வழி போராட்டம் இன்றும் தொடருமென அறிவிப்பு

- Advertisement -

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டுள்ள அகிம்சை வழி போராட்டத்தை இடைநிறுத்த, நீதிமன்ற தடையுத்தரவை வழங்குமாறு கோரி,  மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் சில ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அச்சுவேலி, சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த நிலையில், சுன்னாகம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு, சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கை வழங்கப்பட வேண்டும் எனவும், அறிக்கை கிடைக்கும் வரை, விண்ணப்பத்தை நாளை (05) வரை ஒத்திவைப்பதாகவும், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

அத்துடன், அச்சுவேலி மற்றும் சுன்னாகம் ஆகிய பொலிஸ் நிலையங்களினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களும், நாளை வரை (05) ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று ஆரம்பமானது.

சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கடசிகளின் ஏற்ப்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிகள் சுவீகரிக்கப்படுதல், முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுதல் மற்றும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில்,  குறித்த பேரணி மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் இருந்து, இன்று (04) மீண்டும் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள், எதிர்வரும் ஆறாம் திகதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கே இவ்வாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், போராட்டங்களை நடத்துவதற்கு எதிர்வரும் ஆறாம் திகதி வரை மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz