மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுயாதீனமான நாட்டை உருவாக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் :அத்துரலியே தேரர் வலியுறுத்தல்!

- Advertisement -

இலங்கை மக்களின் இறையாண்மையை மீறி, கிழக்கு முனைய விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தலையீடு செய்வது குறித்து, தாம் மிகுந்த கவலையடைவதாக எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இதன்போது குறிப்பிட்டார்

- Advertisement -

கிழக்கு முனைய விவகாரத்தில் நேரடியாக இந்தியாவின் தலையீடு உள்ளமை, இந்திய உயர்ஸ்தானிகராலயம் வௌியிட்ட அறிக்கையின் ஊடாக புலப்படுகின்றது.நாடொன்றில் புதிய அரசாங்கமொன்று உருவானதன் பின்னர், அந்த அரசாங்கத்திற்கு சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளது. ஏதெனும் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தால், அதனை மீள் பரிசீலனை செய்வதற்கும், மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் உரிமை உள்ளது. இந்த நிலையில் மக்களின் விருப்புக்களுக்கும், இறையாண்மைக்கும் இந்திய அரசாங்கம் தமது உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அழுத்தம் வழங்குவது குறித்து கவலையடைகின்றேன்.இது மிகவும் தீர்மானமிக்க சந்தர்ப்பமாகும்.இலங்கைக்கு உள்ளே இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலையீடும், மறுபுறத்தில் சீனாவின் தலையீடும் உள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz