கிழக்கு முனைய விவகாரத்தில் தலையிடுவதற்கு, அமெரிக்காவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதன்போது குறிப்பிட்டார்
அமெரிக்க தூதரகமும் தற்போது இந்த விடயத்தில் தற்போது தலையிடுகின்றது. இது அமெரிக்காவுக்கு உரிமை இல்லாத விடயமாகும். இலங்கை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று, அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் இதில் இதன் ஊடாக பூகோள அரசியல் உள்ளமை தெளிவாக புரிகின்றது. பிராந்திய மட்டத்தில் காணப்படுகின்ற பூகோள அரசியலாகும் இது. இந்த உத்தேச திட்டங்களுக்கும், வல்லரசு நாடுகளின் முனைப்புக்களுக்கும் சில தொடர்புகள் உள்ளமை புலப்படுகின்றது. நாம் தற்போது எடுத்துள்ள தீர்மானமானது, தேசிய சுயாதீனத்துவ மற்றும் பாதுகாப்பு பக்கத்தில் மிகவும் முக்கியம் என்பதை அமெரிக்க தூதுவருக்கு ஞாபகபடுத்தியுள்ளோம்.