மாபிள் மற்றும் குளியலறை உபகரணங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் இரத்து செய்துள்ளது.
குறித்த தடையை நீக்குவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தீர்மானம் இன்று நீக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அது குறித்த நடைமுறைகளை செயற்படுத்துவதை இரத்து செய்யுமாறு கோரி சுங்க திணைக்களம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.