மெய்ப்பொருள் காண்பது அறிவு

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் தடுப்பூசியினை வழங்க திட்டம்!

- Advertisement -

நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்கவுடனான கலந்துரையாடலின் பின்னரே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய, நாட்டிற்கு  மேலும் 9 மில்லியன்  astra zeneca covishield  கொரோனா தடுப்பூசிகளை  கொள்வனவு செய்வதற்கு  அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் கீழ் COVAX  தடுப்பூசியினை கொள்வனவு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  கடந்த ஐந்து நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Oxford-AstraZeneca Covishield எனும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை கடந்த 29 ஆம் அதிகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர், பொலிஸார் உட்பட ஏனைய பாதுகாப்புப் படையினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz