மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..!

- Advertisement -

நாட்டின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் மேக மூட்டத்துடனான நிலை காணப்படுவதன் காரணமாக மழையுடனான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற் பிராந்தியத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்பதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது, மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்துக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடை 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு மலைச்சரிவுகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரித்து வீசுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் 50 மில்லி மீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு, இடியுடன் கூடியமழை மற்றும் அதிக காற்று வீசும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz