மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானம்!

- Advertisement -

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமை கூட்டத் தொடரின்போது வலியுறுத்துவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு எழுத்து மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை கூட்டத்தொடரின் போது அமைச்சர் தினேஸ் குணவர்தன வீடியோ தொழிநுற்ப்பத்தின் ஊடாக உரையாற்றும் போது வெளிப்படுத்த அரசாங்கம் திர்மானித்துள்ளது. குறிப்பாக அந்த எழுத்துமூல ஆவணத்தில் இரண்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 30 கீழ் ஒன்று மற்றும் 40 கீழ் ஒன்று ஆகிய யோசனைகளுக்கு எதிராகவே அறிக்கை தயாரிக்கபட்டு மனித உரிமைகள் ஆணையாளரிம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 18 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் இரண்டரை பக்கங்கள் முழுமையாக விடயத்துடன் தொடர்புடையதாக உள்ளது. ஆனால் ஏனைய அனைத்தும் விடயத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிராக இனவாத ரீதியில் குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்களை முன்வைக்க மனித உரிமைகள் ஆணையாளரினால் முயாமல் போயுள்ளது. ஆகவே இந்த இரண்டு காரணிகளையும் மையமாக கொண்டு குறித்த அறிக்கையை நிராகறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை அமைச்சர் தினேஸ்குணவர்தனவினால் கூட்டத்தொடரின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz