நாட்டிற்கு 9 மில்லியன் astra zeneca covishield கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த கொரோனா தடுப்பு அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷடி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, AstraZeneca Covishield தடுப்பூசிகளே இவ்வாறு கிடைக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த உதவித்திட்டத்தின் முதலாவது தொகுதி இந்தமாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கட்டம் கட்டமாக நாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.