மெய்ப்பொருள் காண்பது அறிவு

தவறான வெளிநாட்டுக்கொள்கைகளே இந்தியாவின் அழுத்தங்களுக்கு காரணம் – எதிர்க்கட்சி விமர்சனம்!

- Advertisement -

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கைகளே, இலங்கை மீதான வல்லரசு நாடுகளின் அழுத்தங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஸவின் தவறான வெளிநாட்டுக்கொள்கைகள் காரணமாக சக்தி நாடுகளின் அழுத்தங்களுக்கு இலங்கை ஆளாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாவதற்கு முன்னர் 11 பேர் அந்த பதவியில இருந்துள்ளனர். அவரகள் நாட்டை சக்தி  நாடுகளின் அழுததங்களுக்கு உள்ளாகாத வண்ணம் ஆட்சி செய்து வந்தனர். எமது அன்னித்த சக்தி நாடாக இந்தியா காணப்படுகின்றது. இந்தியாவுக்கு வடக்கு பகுதியில் உள்ள நாடுகளுடன் தொடர்ந்தும் நெருக்கடியான நிலையே காணப்பட்டு வருகின்றது. ஆனால் தென்னபகுமதியில் இதுவரை எந்த வொரு பிரச்சினையும் இலலாத நாடாக இலங்கை இருந்து வந்துள்ளது. ஆனால் சீனாவுடனான தொடர்பு தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவிடம் இருந்து கடன் பெற்று பேட்சிட்டி அமைக்க்பட்டது, துறைமுகம் அமைக்கப்பட்டது. விமான நிலையங்கள் அமைக்கபட்டன. இவ்வாறு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததன் காரணமாக இந்தியாவுக்கு அது அழுத்தமாக அமைந்துள்ளது. கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்ப்படவில்லை. இலங்கை சீனாவின் ஒரு பிராந்தியமாக மாறியமையே இந்தியாவின் அழுத்தம் இலங்கைக்கு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது. சீனாவிடம் இருந்து அதிக கடன் பெற்றுக்கொளளப்பட்டதை தொடர்ந்து, அதனை செலுத்தமுடியாது போக தற்போது இலங்கை சீனாவின் பிராந்தியமாக மாறியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz