மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று: முழு விபரம் உள்ளே..!

- Advertisement -

நாட்டில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 800 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் நேற்று மாத்திரம் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, நாடு முழுவதும் 816 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், ஏனைய 10 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்தவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி  தெரிவித்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களில் 212 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 9 பேரும், தெமட்டகொடை மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் தலா 8 பேரும், நாரஹென்பிட்டி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் தலா 7 பேரும், கிரேண்பாஸ் மற்றும்  பம்பலப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த தலா 6 பேரும், பொரளை பகுதியைச் சேர்ந்த 5 பேரும், கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 4 பேரும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் 132 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 131 பேருக்கும் நேற்றைய தினம்  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், களுத்துறை  மாவட்டத்தில் 62 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 37 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 20 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 15 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 10 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும், அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா4 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து 58 ஆயிரத்து 75 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 585 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடைமுறைக்கமைய இதுவரை 95 ஆயிரத்து 550 பேருக்கு astrazeneca covishield தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz