மெய்ப்பொருள் காண்பது அறிவு

நுண் நிதிக் கடன் தொகைக்கான வட்டி வீதத்தை, குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

- Advertisement -

வட மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் நுண் நிதிக் கடன் தொகைக்கான வட்டி வீதத்தை, குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி,  வட்டி வீதத்தை ஒன்பது வீதத்திலிருந்து ஆறு வீதம் வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுண் நிதிக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் கடன் தொகையை, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடன் பொறியில் சிக்கியிலுள்ள மக்களுக்கு, இலகுக் கடன் திட்டத்தை வழங்கும் நோக்கில், நுண் நிதிக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி, வட மற்றும் வட மத்திய மாகாணங்களின் ஆறு மாவட்ட செயலங்களில், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, தற்போது வட மாகாணத்திற்கு 292 மில்லியனும், வட மத்திய மாகாணத்திற்கு 250 மில்லியன் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுக்கு, காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யாழ் மாவட்டத்தில், இடம்பெயர்ந்து வாழும் 409 குடும்பங்களில், 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான காணிகளை, தனியார் உரிமையாளர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz