சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக, இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தொடர் போராட்டம் இன்று முதல் எதிர்வரும் ஆறாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து, காணாமல் போனோரின் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்