மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!

- Advertisement -

தமது நாடு மற்றும் ஜப்பான்  ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை  அமுல்ப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது,

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட  கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான  முத்தரப்பு ஒப்பந்த்தை  இலங்கை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என  இந்திய அரசு எதிர்ப்பார்ப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகாரலயம் குறிப்பிடுகின்றது,

- Advertisement -

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் வௌியிட்டுள்ள கருத்திலேயே  இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,

அத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த திட்டத்தை வௌிநாட்டு முதலீட்டாளர்களுடன் முன்னெடுக்க இலங்கை அமைச்சரவையும் தீர்மானித்திருந்ததாகவும் அந்த புரிந்துணர்வுடன் அனைத்து தரப்பும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கை வருகையின் போது  கிழக்கு முனையத்தை அதானி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 100 வீதமான அதிகாரம் துறைமுக அதிகார சபையின்  வசமிருக்கும் வகையில் இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த கருத்து வௌியாகியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz