மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெடுந்தீவுக்கு நிரந்தர கால்நடை வைத்திய அதிகாரியை நியமிக்க அங்கஜன் நடவடிக்கை!

- Advertisement -

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டம், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

இதன்படி, குறித்த கூட்டத்தின் போது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, தீர்மானங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, நெடுந்தீவில் நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாது இருந்த நெடுந்தீவு பிரதான வீதியை புனரமைக்குமாறு, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

அத்துடன், நெடுந்தீவுப் பகுதிக்கு இரண்டு புதிய பேருந்ந்துகளை வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடதாரகையின் திருத்தப் பணிகள் முடிவடையும் வரை அதன் எரிபொருளினை நெடுந்தாரகைக்கு வழங்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்கவே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், மூழ்கி போன படகுகளை அகற்றவும், இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மூழ்கப்  போன படகுகளினால் கடற் பிரயாணிகளும் மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, புங்குடுதீவு கமநல சேவை திணைக்களத்தின் பெரும்போக உத்தியோத்தியோத்தரை,  திங்கள் மற்றும் புதன்கிழமைகளில்,  நெடுந்தீவிற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கமநல சேவை திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, அங்கஜன் ராமநாதனினால் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவு உப கமநல சேவை திணைக்களத்திற்கு பெரும்பாக உத்தியோகத்தர் வருகை தருவதில்லை என, பிரதேச விவசாயிகளினால் கூறப்பட்ட நிலையிலேயே, இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நெடுந்தீவுப் பகுதிக்கு, கால்நடை வைத்திய அதிகாரி ஒருவரை நெடுந்தீவிற்கு நிரந்தரமாக நியமிக்குமாறும், , நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் ராமநாதன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், பெப்ரவரி 15 ஆம் திகதி முதல், கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz