மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு – கல்வி அமைச்சர் (வீடியோ)

- Advertisement -

மேல் மாகாணத்தில் அனைத்து வகுப்புகளுக்காகவும் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

“மேல் மாகாணத்தில் தற்போது 11 ஆம் வகுப்புக்காக மட்டுமே பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஏனைய வகுப்புகளுக்காகவும் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை வெகு விரைவில் திறப்பதற்கே நாம் முயற்சித்து வருகிறோம். இந்த பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கமைய கடந்த 3 நாட்களில், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் இடம்பெற்றன. அந்த குழுக்களின் பரிந்துரைகள் எமக்கு கிடைத்துள்ளன. இந்த பரிந்துரைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது அனுமதியைப் பெற்று இந்த பாடசாலைகளையும் திறப்பதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். கொழும்பு மாவட்டம் தொடர்பிலான பரிந்துரைகளையும் இந்த வாரத்திற்குள் பெற்று அதனை சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளோம்.”

இதனிடையே மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு Rapid antigen   பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டம் ராஜகிரியவில் உள்ள ஜனாதிபதி வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் சுமார் 30 மானவர்களுக்கு Rapid antigen பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் மூலம் பாடசாலைகளில் கொரோனா தொற்றுப் பரவல் எந்தளவு உள்ளது என்பதனை அறிந்துகொள்ள முடியுமென கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

அத்துடன், இந்த சோதனையின் மூலம் மாணவர்களின் நிலை, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் தொடர்பிலும் அறிந்துகொள்ள முடியுமெனவும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz