மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாக்குறுதியை மீறி செயற்பட்டால் நாடு தனித்துவிடப்படும் – ஹிருணிகா!

- Advertisement -

தற்போதைய அரசாங்கம்  ஒரு நாடு, ஒரு கொள்கை என சர்வதேசத்துக்கு வழங்கியுள்ள வாக்குறுதிக்கமைய செயற்படவில்லை எனில் நாடு தனித்துவிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

குருணாகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

இதனிடையே, வெளிநாடுகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை வழங்குவதாக வாக்குறுதியளித்து கடன்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், வழங்கிய வாக்குறுதியை மீறி செயற்படும் போலியான அரசாங்கமே தற்போது உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு நாட்டை பகுதி பகுதியாக விற்பனை செய்வதன் மூலம் நாட்டில் எதுவும் எஞ்சியிருக்கப்போவதில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், தற்போதைய தலைவர்கள் நாட்டை மூன்று நான்கு பகுதிகளாக உடைத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் எதிர்கால சந்ததிக்கான நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

யாழில் குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது...

சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தபட்ட நாராங்கலை மலை..!

பதுளை மாவட்டத்தின் சொரணாத்தொட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட Narangala மலையை சுற்றுலாத் தளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

Developed by: SEOGlitz