- Advertisement -
வவுனியா நகர பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கருத்திற் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகர சபை தெரிவித்துள்ளது.
- Advertisement -
இந்த நிலையில், நகர சபையின் தடை உத்தரவை மீறி வீதியோர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக, இன்று காலை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வீதியோர வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், வியாபாரிகளுக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது