ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கில் உறுதியான தீர்ப்பொன்று வரும் வரை அவரை நாடாளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என இதன் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய வாதங்களை இங்கு முன்னெடுத்துள்ளீர்கள். நீதிமன்றத்தில் வாதம் புரிந்து இது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமேயன்றி இங்கு வாதம் புரிந்து தீர்மானங்களை மேற்கொள்ள முடியது. அதனால் எமது உறுதியான தீர்ப்பொன்று வரும் வரை ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என்பதை நான் அறிவித்துக் கொள்கின்றேன்.