மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் இன்று வெளியான மற்றுமொரு தீர்ப்பு!

- Advertisement -

மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் தம்மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட சிறைக்கைதிகள் 63 பேருக்கு இரண்டு மாத மேலதிக தண்டனைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவிந்திர ரஞ்சன் பண்டார இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

- Advertisement -

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 68 சிறைக்கைதிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன்படி, 63 சிறைக்கைதிகள் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டதுடன், 5 சிறைக்கைதிகள் தாம் குற்றவாளிகள் அல்ல என தெரிவித்தனர்.

இதற்கமைய, குறித்த 5 சிறைக்கைதிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பெப்ரவரி 8 ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, 50 சிறைக்கைதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த சந்தர்ப்பத்தில் தமது குற்றத்தை ஏற்றுக் கொள்ளாத 12 சிறைக்கைதிகளும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பெப்ரவரி 8 ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அனுமதியின்றி சிறைக்கூடங்களை விட்டு வெளியேறியமை, கலவரத்தில் ஈடுபட்டமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்த 118 சிறைக்கைதிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz