மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் வௌிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

- Advertisement -

இலங்கையில் வௌிநாட்டு இராஜதந்திரிகளுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரி இன்று தமக்கான கொவிட் 19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டமை தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இதன் போது கல்வியமைச்சர் ஜீ எல் பீரிஸ் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் பங்கேற்றிருந்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வௌிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தடுப்பூசி வழங்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் தூதுவர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதற்கட்டமாக கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் வைத்தியர்கள் மற்றும் படையினருக்கும் முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசாங்கம் பல்வேறு ஆவணங்களை மறைக்கின்றதா?- வகமுல்லே உதித தேரர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில், அரசாங்கம் பல்வேறு ஆவணங்களை மறைக்கின்றதா என தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகமுல்லே உதித தேரர் கேள்வி எழுப்புகின்றார். அம்பலான்தோட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்...

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கில்லை: பிரசன்ன ரணவீர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிக்கின்றார். கம்பஹா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த...

மேற்கிந்திய தீவு அணிகளை வெற்றி கொண்டது இலங்கை..!

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 ஆவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் கூலிஜ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் கொடுத்த வாக்கை மீறிய அரசாங்கம்: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

Developed by: SEOGlitz