கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய நாளில் 158 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய நாளில் 584 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 147 பேரும், கண்டி மாவட்டத்தில் 43 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணபட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய மாவட்டங்களில் 236 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பேலியகொடை – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அதில் 39 ஆயிரத்து 863 பேர் குணமடைந்து விடுதிரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன், இதுவரையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 539 ஆக காணப்படுகின்றது.
அதில், 42 ஆயிரத்து 620 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத’து 675 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், நேற்றைய நானில் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதன் காரணமாக, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் முப்படையினராலும் நடாத்திச்செல்லப்படும் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில், 6 ஆயிரத்து 606 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்றைய நாளில் மாத்திரம் 12 ஆயிரத்து 139 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுள்ளன.