கொவிட் 19 தடுப்பூசியை நாட்டில் விநியோகிப்பதற்காக 8 பேரடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரான லலித் வீரதுங்க நியமிக்ககப்பட்டுள்ளார்.
இதற்கான அரச வர்த்தமானி கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் கங்காணி லியனகே தெரிவித்தார்.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா,மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, வைத்தியர் அசேல குணவர்த்தன, வைத்தியர் அனுருத்த பாதெனிய, வைத்தியர் பிரசன்ன குணசேன, கே ஆர் உடவலவ மற்றும் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்து நாட்டிற்கு நாட்டில் விநியோகிக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணிக்கு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.