மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் சிலர் நாட்டுக்கு வருகை!

- Advertisement -

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 195 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் ஐந்து விசேட விமானங்கள் ஊடாக  இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

- Advertisement -

பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து 68 பேரும், ஜப்பானில் இருந்து 50 பேரும், கட்டாரிலிருந்து 45 பேரும், மாலைதீவிலிருந்து 24 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8 பேரும், இவ்வாறு வருகைத்தந்துள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 268 பேர் 6 விமானங்களினூடாக இன்று நாடு திரும்பவுள்ளனர்.

இதன்படி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 70 பேரும், இந்தியாவிலிருந்து 62 பேரும், மாலைதீவிலிருந்து 16 பேரும், இத்தாலியிலிருந்து 33 பேரும்,  துருக்கியிலிருந்து 10 பேரும், சிங்கப்பூரிலிருந்து 67 பேரும் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கபடவுள்ளதுடன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20  மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்றைய நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு விலை மனு...

Developed by: SEOGlitz