மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று – 4 உயிரிழப்புக்கள் பதிவு!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் மேலும் 235 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 854 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா மரணங்கள் நான்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர், கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 91 வயதுடைய பெண்ணொருவர், அகலவத்தை  பகுதியைச் சேர்ந்த  65 வயதுடைய ஆணொருவர் மற்றும் தர்காபகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நால்வரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஒரே தடவையில் நடப்பதை நிறுத்தவே இவ்வாறு செய்தோம்: சுமந்திரன் விளக்கம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரேநாளில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள...

Developed by: SEOGlitz