கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டையொட்டி, நாடாளுமன்ற ஊழியர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற நிலையில், குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு, மத்தியிலும் இலங்கையர்கள், ஜனநாயகத்துக்காக பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அனைவரும் பொது நன்மைக்காக உழைக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க, நாடாளுமன்றத்தினால் முடிந்ததாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்பட்ட காரணத்தினாலேயே, கடந்த வருடத்தில் நிலவிய சவால்களை வெற்றிகொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய சவால்களை வெற்றிகொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் என, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மேலும் கூறியுள்ளார்.