மெய்ப்பொருள் காண்பது அறிவு

மருதனார்மடம் கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

- Advertisement -

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 240 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில், மருதனார்மடம் சந்தையில் தொற்றுக்குள்ளான வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய  இருவருக்கே இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின்  எண்ணிக்கை 133 ஆக உயர்வடைந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை முறையாக புரிந்து, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதுவருடத்திற்கான அலுவல்களை ஆரம்பிக்கும் நோக்கில், அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற, சிறந்த எண்ணங்களுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சுபீட்சமான தொலைநோக்கு கொள்கையை செயற்திறனாகவும், சிறந்த முறையிலும் முன்னெடுத்துச் செல்ல, அனைத்து அரச சேவையாளர்களும் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும், 15 இலட்ச அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஆறு லட்சம் மக்களுக்கு, எந்தவித தடையுமின்றி சம்பளம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு – டேம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கொழும்பு – டேம் வீதியில் பயணப் பை ஒன்றில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் என பொலிஸார்...

எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது: காதர் மஸ்தான்!

ஐ. நா மனித உரிமை பேரவையில் ஆதரவு பெறுவதற்காக தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களை ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்வதாக   எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய விடயமல்ல அல்ல என...

கொடுத்த வாக்கை மீறி செயற்படும் அரசாங்கம்: இம்ரான் மஹ்ரூப் கருத்து!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் இன்று அதனை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திருகோணமலை பிரதேசத்தில்...

ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது: கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிராகரிக்க  இலங்கை எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான குறித்த அறிக்கையை இந்தியா...

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்து குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

Developed by: SEOGlitz