நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் சுமார் 50 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் 597 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 256 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாரஹென்பிட்டி பகுதியில் 79 பேரும், பொரளை பகுதியில் 60 பேரும், கிரேண்ட்பாஸ் பகுதியில் 26 பேரும், தெமட்டகொட பகுதியில் 19 பேரும், கொம்பனி தெரு பகுதியில் 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொழும்பு கோட்டை, கொள்ளுபிட்டி, மட்டக்குளி, பத்தரமுல்லை, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொழும்பு மாவாட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 62 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கம்பஹா மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களில் 48 பேர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தில் 36 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 34 பேரும், கண்டி மாவட்டத்தில் 33 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 20 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும், பதுளை மாவட்டத்தில் இரண்டு பேரும் நேற்றைய தினம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 619 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் மேலும் 826 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, இதுவரை 36 ஆயிரத்து 155 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஆறாயிரத்து தொள்ளாயிரத்து 40 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.