கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு கொரோனா மரணம் இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அகிலன் கெப்பிட்டல் செய்திபிரிவிற்கு இதனை உறுதிப்படுத்தினார்.
இதேவேளை கடந்த 12 மணித்தியால காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணம் கொரோனா வைரஸ் தொற்று அபாயநிலையினை எதிர்கொண்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் எமது கெப்பிட்டல் செய்திபிரிவுக்கு தெரிவித்தார்.
இதனிடையே பசறை – ஹிங்குருகடுவ பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பசறைபகுதியில் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி 54 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பிரகாரம் இன்று குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பசறை பொதுசுகாதார பரிசோதகர தெரிவித்துள்ளார்.
இதன்படி பசறை பிரதேசத்தில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்