சாரதி அனுமதிபத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி முதலாவது சாரதி அனுமதிபத்திரம் வழங்கும் நடவடிக்கை இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் வேரஹெர அலுவலகத்தில் இன்று ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ப ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பிரகாரம் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக சர்வதேச நிறுவனம் ஒன்றினால் இலங்கையில் சாரதி அனுமதிபத்திரங்கள் அச்சிடப்பட்டுவந்த நிலையில் தற்போது குறித்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.