மாகாண சபை முறைமையை இலங்கை இல்லாதொழிக்க முற்படுமானால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அது தொடர்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து வௌியாகியுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் இல்லாமலாக்கும் செயற்பாடு என டி ஆர் பாலு குறிப்பிட்டுள்ளார்,
அத்துடன் அது இலங்கை இந்திய உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்,
இலங்கை தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கும் நோக்கிலேயே மாகாண சபையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி ஆர் பாலு குறிப்பிட்டுள்ளார்.