நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 310 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, பேலியகொடை கொரோனா கொ த்தணியுடன் தொடர்புடைய 302 பேரும், சிறைச்சாலை கைதிகள் 08 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 530 குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 398 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் 32 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக,கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவிக்கின்றது.
இதன்படி, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 149 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொழும்பு மாவட்டத்தில் நாளாந்தம் தொற்றினால் பாதிக்கப்டுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 37 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
எனினும், களுத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 110 பேர் அதிகபட்சமாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக, கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவிக்கின்றது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 88 பேரும், கண்டி மாவட்டத்தில் 28 பேரும், கேகாலைமாவட்டத்தில் 52 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம், முல்லைதீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில்தலா இருவரும், நுவெரெலியாவில் 09 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 15 பேரும் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டின் இருபது மாவட்டங்களில் இருந்து 569 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக, நேற்றைய தினம் நாடு முழுவதும் 13 ஆயிரத்து 224 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக, கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.