மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி -கந்தபுரம் கரும்பு தோட்ட காணி விவகாரத்துக்கு தீர்வு கிடைக்குமா?

- Advertisement -

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தபுரம் கரும்பு தோட்ட காணி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள்  நிலவியுள்ளன.

1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் சீனி உற்பத்தி நிறுவனம், 1983ம் ஆண்டளவில் சீனி  உற்பத்தி செயற்பாட்டினையும், கரும்பு செய்கையினையும் முற்றாகவே கைவிட்டுள்ளதாக பிரதேச கமக்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அதன் பின்னர் தென்னை மற்றும் உப பயிர் செய்கை மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

குறித்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் போர் சூழல் காரணமாக வெளிநாடுகளிற்கு செல்கின்றபோது முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 1983ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2008ம் ஆண்டுவரை  காணியில் உள்ள வருமானங்களை எந்தவித அரச வரிகளும் செலுத்தாமல் தேறிய இலாபமாக வருடம் ஒன்றிற்கு 24 லட்சம் வீதம் 25 வருடங்களாக பெற்று வந்துள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தற்போது குறித்த காணியின் ஊடாக  ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100 லட்சம் ரூபா இலாபமாக பெறப்பட்டு வருவதாக, கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான தயாபரன் தெரிவிக்கின்றார்.

 

 

இவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் செய்கை மேற்கொண்டு வந்த விவசாயிகள் சிலருக்கும் செய்கை மேற்கொள்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

அத்துடன், குறித்த காணியில் 25 வருடங்களிற்கு மேலாக,  வசித்தவரும் குடும்பம் ஒன்று தற்காலிக கொட்டகையில் வாழ்ந்து வருகின்றது

இந்த நிலையில்,  இவர்களிற்கு மலசலகூடம் அமைப்பதற்கு கூட முடியாதுள்ளதாகவும், அதனை அரச காணி என அதிகாரிகள் காரணங்களைக் கூறி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

இந்த நிலையில், குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியொன்றை வைக்குமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக Saliya Pieris தெரிவு!

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி Saliya Pieris தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 85 ஆவது தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்படி, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான, Kuvera de...

கிழக்கின் காடுகளை ஊடறுக்க போகும் விசேட இராணுவப்படை..!

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காடழிப்பு நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட படையணியொன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட...

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடை 190 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவின் ஆதரவை கோரும் கூட்டமைப்பு…!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா ஊடகங்களுக்கு இவ்வாறு...

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகள் அவசியம் – அங்கஜன் கோரிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மத்திய செயற்குழுக்கூட்டத்தில் உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Developed by: SEOGlitz