மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒத்திவைக்கப்படுகிறதா 1000 ரூபா சம்பள பேச்சுவார்த்தை?

- Advertisement -

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு அண்மையில் கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றிய ஏனைய தரப்பினரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஏனையோருக்கான PCR முடிவுகள் இதுவரை வெளிவராத நிலையில், இன்றைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்வதைத் தவிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..!

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

Developed by: SEOGlitz