நேற்றைய நாளில் நாட்டின் 21 மாவட்டங்களில் இருந்து 453 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 249 கொரோனா தொற்றாளர்களில், 28 பேர் புதுக்கடையிலும், மட்டக்குளியில் 24 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கொள்ளுபிட்டியவில் 22 பேரும், பொரளையில் 20 பேரும், கொம்பனித்தெருவில் 15 பேரும், நேற்றைய நாளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், அவிசாவளை பிரதேசத்தில் 29 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் 18 பேரும் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் 52 பேரும், கண்டி மாவட்டத்தில் 38 பேரும், காலியில் 29 பேரும், மாத்தறையில் 16 பேரும், இரத்தினபுரியில் 14 பேரும், நேற்றைய நாளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் 11 பேரும், குருணாகலையில் 10 பேரும், முல்லைத் தீவில் 6 பேரும், களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா 5 பேரும், அம்பாறையில் 4 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.