நாட்டில் தினசரி முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை விரைவுபடுத்தல் மற்றும் சுற்றுலாப் பயண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட உள்ளதன் காரணமாக நாளாந்த PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது அவசியம் என சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.