கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கைக்கு பொருத்தமான தடுப்பூயை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ள தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக கிட்டத்திட்ட 192 நாடுகள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாட்டுக்கு பொருத்தமான மற்றும் அவசியமாக தடுப்பூசிகளை மிக விரைவாக பெற்றுக்கொள்ளவும் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும், உதவித்திட்டங்களுக்கு அமைவாக நாட்டுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தேவையான நிதியை வழங்கி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.