கிழக்கில் கடந்த 12 மணிநேரத்தில் 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி, கல்முனை தெற்கில் 24 பேரும், கல்முனை வடக்கில் 3 பேரும், காத்தான்குடியில் 4 பேரும் அடையாளத் காணப்பபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மட்டக்களப்பு, வெல்லாவெளி, ஆரையம்பதி, தமண, கோமரன்கடவல, சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகணத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1058 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று(29) முதல் கல்முனையின் பல பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.