நாட்டில் மேலும் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 420 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, சிறைச்சாலை வளாகத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளான மேலும் 54 பேர் நேற்று அடையாளங் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சிறைச்சாலை வளாகத்துடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களுள் மூவாயிரத்து 117 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 520 பேர் குணமடைந்து இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 221 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 8 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 497 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 12 இலட்சத்து 4 ஆயிரத்து 350 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய நாளில் 12 ஆயிரத்து 222 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.