பசறை, காவத்தை மற்றும் டெமேரியா பகுதியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் வீ. இராஜதுரை தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் கடந்த 26ஆம் திகதி இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, குறித்த இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணிய நபர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வருகை தந்த நபர்கள் ஆகியோர் உள்ளடங்கிய 34 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
PCR பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.