மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் வாகன விபத்து – 47 பேர் உயிரிழப்பு!

- Advertisement -

கடந்த 10 நாட்களில், நாட்டில் வீதி விபத்துக்களினால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 394 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

- Advertisement -

இதன்படி, அவர்களில் 127 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் , 267 பேர் சிறு காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் 573 வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பண்டிகை காலத்தில் வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தி, வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 20 ஆம் திகதி முதல், பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், இவ்வாறான விபத்துக்கள் துரதிஷ்டவசமாக ஏற்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர்  அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

வீதி ஒழுங்கைச் சட்டங்களை பின்பற்றாமை, அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துவதே, இவ்வாறான விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஆயிரத்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை, இவ்வாறு தொடர்ந்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இருதினங்களில், பொதுப் போக்குவரத்து சேவைகளில், பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்படி, தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் வீதி ஒழுங்கை சட்டங்களை மீறும் நபர்களை, அவர்கள் அடையாளங் கண்டு கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறினார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

7 விக்கெட்டுகளினால் வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்ட Multan Sultans அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 7 ஆவது போட்டியில், Multan Sultans அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. Lahore Qalandars மற்றும் Multan Sultans அணிகளுக்கு இடையிலான 7 ஆவது போட்டி நேற்று ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கையை ஆராயும் குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்கும்: பிரசன்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் இறுதி அறிக்கையை ஆராயும் விசேட குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்குமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

மத்தியவங்கி முறிகல் மோசடி – பிரதான சூத்திரதாரியின்றி வழக்கை கொண்டுசெல்ல சட்டமா அதிபர் தயார் – அலிசப்ரி தெரிவிப்பு!

மத்தியவங்கி முறிகல் மோசடியின் பிரதான சூத்திரதாரியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மத்தியவங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இல்லாத நிலையில் வழக்கை கொண்டுசெல்வதற்கு சட்டமா அதிபர் தயாராக உள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மத்தியவங்கி முறிகல் மோசடி...

Developed by: SEOGlitz