சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவின் அவசர அழைப்புக்கான தொலைபேசி கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த தொலைபேசி கட்டமைப்பு தற்காலிகமாகவே செயலிழந்துள்ளதாகவும், அதனை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த தொலைபேசி கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் வரை, கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவை தொடர்பு கொள்வதற்கான தற்காலிக அழைப்பு இலக்கங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கியுள்ளது.
இதன்படி, 011 24 22 222, 071 44 66 232 மற்றும் 071 42 74 161 ஆகிய தற்காலிக அழைப்பு இலக்கங்களின் மூலம் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.