சிறைக்கைதிகள் அமைதியின்மையில் ஈடுபடுவதற்கு பிரதானமாக அமைந்த காரணம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது 6 மாதங்களுக்கும் மேல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் உள்ளனர். நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பலர் இருக்கின்றனர். தாம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தையும் விட அதிக நாட்கள் அவர்கள் சிறையில் உள்ளனர். எனவே அவர்கள் தொற்று ஏற்பட கூடுமென சந்தேகிக்கின்றனர். ஆகவே எந்த காரணங்கள் இருந்தாலும் சிறைக் கைதிகளின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு காரணம் ஒன்று உள்ளது. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாறாக பொலிஸாரை கொண்டு தாக்குவதோ, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதோ பொருத்தமாக அமையாது.