மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடற்றொழிலாளர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்!

- Advertisement -

நாட்டிற்கு தென்கிழக்கு திசையில் வங்காள வரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையானது தாழமுக்க பிரதேசமாக மாற்றமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக மழையுடனான வானிலைக் காணப்படுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றின் வேகமானது 40 முதல் 50 கிலோமீற்ர் வேகத்தில் காணப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்துவரும் மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமிற்றர் வேகத்தில் அதிகரித்து காணப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

மின் கட்டணங்கள் குறைக்கப்படுமா? துமிந்த திஸாநாயக்க விளக்கம்…

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, மின் கட்டணங்களை குறைக்கும் வகையில், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி,...

Developed by: SEOGlitz