மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் – தீவகத்தில் ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் தடை!

- Advertisement -

யாழ்ப்பாணம் – தீவகத்தில் ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை இவ்வாறு ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு  பிறப்பித்துள்ளது.

- Advertisement -

ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று மாலை இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஊர்காவற்றுறை பொலிஸாரின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டமை குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 6 பேருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

மின்சாரத் துறையின் மாற்றங்கள் தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து!

மின்சாரத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் அழைப்பு விடுப்பதாக, மின்சக்தித் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையில் மாத்திரம் 65 லட்சம் பயனாளர்கள் இருக்கின்றனர். அத்துடன் Leco நிறுவனத்தில் மாத்திரம்...

Developed by: SEOGlitz