மெய்ப்பொருள் காண்பது அறிவு

அக்கரைப்பற்று மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

- Advertisement -

அதி சுகாதார அபாய வலயமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

58 கொரோனா தொற்றாளர்கள் அக்கரைப்பற்று பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அக்கரைப்பற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையின் மூலம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்முனை பிரதேசத்திலும் தற்போது வரை 86 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ லதாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை பொதுமக்கள் தொடர்ச்சியாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறு மாகாண அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இதனை கருத்திற் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் எந்தவொரு நபரும் தமது வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என ஆளுநர் கோரியுள்ளார்.

அத்துடன், குறித்த பகுதி மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, வாகனங்களின் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரால் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

60 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 311 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா...

சீன அரசாங்கத்தினால் அடுத்த மாதம் இலங்கைக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசிகள்!

இலங்கைக்கு சீன அரசாங்கம் மூன்று இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் அவை இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை...

SAMSUNG GALAXY S21 SERIES : அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு!

SAMSUNG GALAXY S21 SERIES: அனைத்து வகையிலும் உன்னதமான ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்துக்கு உன்னதமான வடிவமைப்பு. தற்போது முற்பதிவு செய்து கொள்ள முடியும் WEDNESDAY, 27TH JANUARY 2021, COLOMBO: இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட்...

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் 100 பேர் பலி..!

மாலியில் இடம்பெற்ற பிரான்ஸ் படைகளுடனான தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 100 பேர் உயிரிழந்துள்ளனர். சாஹேல் பாலைவனம் அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக மாலி ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2012 ஆம் ஆண்டில் இருந்து வடக்கு...

தீர்வு இல்லாவிட்டால் சேவையில் இருந்து விலகுவோம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்!

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  எதிர்வரும் 9 ஆம் திகதி முதல்  சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளதாக   தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

Developed by: SEOGlitz